ஸ்ரீ கோவிந்தன்
பல்லவி
கோவிந்தா கோவிந்தா கோவிந்தா வென்று
கூவியழைத்தே னென் குறைதீர்த்தருள்வாய்
அனுபல்லவி
தேவாதி தேவனே திருவேங்கட முடையானே
நாவிலுன் நாமமே ஓதித் துதித்தேன்
சரணம்
பூவிலமர் பிரமனும் சுகசனகாதியரும்
தேவரும் நாரதரும் வணங்கிடும் கேசவனே
மூவாசைப் பிணி போக்கி முன்வினைப் பயன் நீக்கி
தாவியணைத்தென் தாபம் களைவாயே
No comments:
Post a Comment