மங்கள மூர்த்தி
பல்லவி
சங்கடமிடர் களையும் சங்கரன் மகனை
மங்கள மூர்த்தியை மனமாரத் துதித்தேன்
துரிதம்
நந்தியும் கணங்களும் தேவரும் முனிவரும்
பிரமனுமிந்திரனும் கரம் பணிந்தேத்தும்
அனுபல்லவி
எங்கும் நிறைந்திருக்கும் ஏழைப் பங்காளனை
வெங்கதிரோன் சுடரைப் பழிக்குமொளி உடையானை
சரணம் (1)
பொங்கரவணை துயிலும் கேசவன் மருகனை
அங்கமில் மதனழகை மிஞ்சுமழகுடையவனை
துங்கக்கரிமுகனை தும்பிமுகப் பெருமானை
திங்கள் பிறையணிந்த ஆனை முகத்தோனை
சரணம் (2)
அங்குசம் பாசம் தந்தம் மோதகம்
தன்கையிலேந்தும் தந்தி முகத்தோனை
காங்கேயன் சோதரனை காரமர் மேனியனை
சங்கீத நாட்டியக் கலைகளின் ரசிகனை
No comments:
Post a Comment