ஸ்ரீ மஹா லக்ஷ்மி
பல்லவி
உருகி மனமார உனையே துதித்தேன்
அருகிருந்து காத்தருள்வாய் ஸ்ரீ மகாலட்சுமி
அனுபல்லவி
திருமால் கேசவன் மணிமார்பில் கொலுவிருக்கும்
திருமகளே உந்தன் திருவடியே தஞ்சமென்று
சரணம்
அருளமுதாய்ப் பாற்கடலிலவதரித்தவளே
பெருகிடும் கருணை அடியார்க்களிப்பவளே
பொருளும் போகமும் நல்வாழ்வும் தருபவளே
இருள் நீங்கியென் வாழ்வு ஒளியுறச்செய்திடவே
No comments:
Post a Comment