Friday, 5 September 2014

மலைமகள் மைந்தன்

 

மலைமகள் மைந்தன் 



பல்லவி

 அலைமகள் கலைமகள் பணிந்திடும் கரிமுகனை

  மலைமகள் மைந்தனை மனமாரத் துதித்தேன்

  அனுபல்லவி

    நிலையிலா உலகில் நிலைத்திருப்பவனை

    கலை இசை நாடக நாட்டிய ரசிகனை

       சரணம்

   வலக்கையில் தண்டமும் இடக்கையில் கமண்டலமும்

   நலமுடனேந்தி நிற்கும் ஞானக் கொழுந்தினை

   நிலவின் பிறையணிந்த  ஆனை முகத்தோனை

   வலம்புரி கணபதியை  கேசவன் மருகனை

 

 
     

No comments:

Post a Comment