Sunday, 7 September 2014

கலியுக வரதன் கோவிந்தன்

கலியுக வரதன் கோவிந்தன் 


பல்லவி

வாசமலர் சோலைகள் சூழ்  திருவேங்கடம்தன்னில்

தேசுடன் வீற்றிருக்கும்  கேசவனைப் பணி மனமே

அனுபல்லவி

பேசும் தெய்வமாய்  கலியுகம் தனிலே

நேசமுடன் பக்தருக்கு அருள் மழை பொழியும்

சரணம்

எட்டெழுத்து நாமம் துதிப்பவர்க்கெல்லாம்

மட்டற்ற மகிழ்ச்சியும் பிறப்பிறப்பில்லாத

பெரும் பேறு கிடைத்திடும் பாக்கியமளித்திடும்

 மலையப்ப சுவாமியை  ஏழு மலையானை






Sri Malaiappa Swamy, Tirumala Tirupathi.

பேசுமிந்திருநாமமெட்டெழுத்தும் சொல்லிநின்று, பின்னரும்,

பேசுவார்த்தம்மையுய்யவாங்கிப் பிறப்பறுக்கும் பிரானிடம்,

வாசமாமலர்நாறுவார் பொழில்சூழ்தருமுலகுக்கெல்லாம்,

தேசமாய்த்திகழும்மலை திருவேங்கடமடைநெஞ்சமே.

(Thirumangai Azhwar)

Those who recite the eight-syllable Mantra (Om Namo Narayana), over and over again,- He elevates and rids them of their birth.

He resides in fragrant blossoming bowers as a beacon in the sky for the dark world below, in Tiruvenkatam, Oh Heart!

No comments:

Post a Comment