Friday, 12 September 2014

வாரணமுகன்





              வாரணமுகன்    

              பல்லவி

      சரணம் சரணம் கணபதி சரணம்

      அரனயனரி பணி  திருவடி சரணம்

              அனுபல்லவி

       மரணம் பிறப்பெனும் பவச்சுழல் களைந்திடும்

       வரம் தரும் வாரண முகனே சரணம்

                  சரணம்

      கரமலர் தனிலே பாசங்குசமேந்தும் 

       சரவணன் சோதரனே கேசவன் மருகா 

      நரர் சுரரும்  நந்தியும் கணங்களும் தேவரும்

 பிரமனும் வணங்கிடும் சுமுகனே சரணம்







     








  

No comments:

Post a Comment