வைணவன் கேசவன்
பல்லவிதிருநாமமுரைப்பதன்றி வேறொன்றுமறியேன்
திருவடி நிழலோன்றே அறிந்தேன் கேசவா
அனுபல்லவி
ஒருநாளுமுன் நாமமுரைக்காமல் இருந்திலேன்
திருவடி துதிக்காத நேரமுமிருந்த தில்லை
சரணம்
சாத்திர புராணங்கள் வேதங்கள் கற்ற தில்லை
தோத்திரங்களேதும் உனைப் புகழ்ந்து சொன்னதில்லை
கோத்திரம் குலமெதுவும் பெரிதாக எனக்கில்லை
நேத்திரம் வைத்தென்னைக் காத்தருள்வாயே
No comments:
Post a Comment