Thursday, 11 September 2014

மங்கள மூர்த்தி

       மங்கள மூர்த்தி 


         பல்லவி


      சங்கடமிடர் நீக்கும் பங்கய பதத்தானை

      மங்கள மூர்த்தியை மனமாரத் துதித்தேன்

          அனுபல்லவி

     சங்கரன் மகனைக் கேசவன் மருகனை

     எங்கும் நிறைந்திருக்கும் ஏக தந்தனை

               சரணம்

     வெங்கதிரோனொளியை மிஞ்சும் சுடரோனை

      அங்கமில் மதனைவிட  பேரழகுடையவனை

      திங்கள் பிறை சூடும் துங்கக் கரிமுகனை

      மங்காத புகழ் மேவும் மனித்வீப கணபதியை 

No comments:

Post a Comment