திருப் பெருந்துறை சிவன்
பல்லவி
பெருந்துறை பெருமானே அருள் தரும் சிவனே
திருவடி பணிந்தேன் எனக்கருள் புரிவாய்
அனுபல்லவி
வருமிடர் களைந்திடும் அருமருந்தே தேனே
திருமால் கேசவன் நேசனே ஈசனே
சரணம் (1)
கருணைக்கடலே செழுநீர் திரளே
விரும்பும் வரம் தரும் விளக்கே ஒளியே
வருந்தித்துதிப்பவர் மனத்திற்கு விருந்தே
அருந்தவப்பயனே ஆதியே அந்தமே
சரணம் (2)
கரும்பே கனியே முக்கண் முதலே
கருவுருவாகாத உருவமே அருவமே
நெருப்பே நீள் விசும்பே அனலே புனலே
பெருங்காற்றே பேரின்ப ஆனந்தப் பொருளே
No comments:
Post a Comment