பவனி வரும் விநாயகன்
பல்லவி
தேரேறி பவனி வரும் விக்ன விநாயகனை
காரமர் மேனியனை மனமாரத் துதித்தேன்
அனுபல்லவி
ஈரேழு பதினான்கு உலகையுமாண்டிடும்
வாரண முகனைக் கேசவன் மருகனை
சரணம்
தாரமர் கொன்றை சண்பக மாலையணி
ஊரர்தம் பாகத்து உமையவள் மைந்தனை
பாரோர் பணிந்தேத்தும் பங்கய பாதனை
சீர்மல்கும் திருவாரூர் வாதாபி கணபதியை
No comments:
Post a Comment