மாயன்
பல்லவி
என்னுள்ளம் புகுந்தென்னை ஆட்டுவிக்கும் கண்ணனை
மன்னு புகழ் கேசவனை மனமாரத்துதித்தேன்
அனுபல்லவி
இன்னுயிர னைத்தையும் தன்னுயிராய்க் கொண்டவனை
இன்னிசைக்குழலூதி இதயம் கவர்ந்தவனை
சரணம்
தன்னடி தொழுவோர்க்கு நன்னலம் தருபவனை
புன்னகை முகம் காட்டி ஈரேழு உலகாளும்
மன்னவனை மாயவனை மணிக்கூடநாயகனை
பொன்னரங்கம் தலத்துறையும் ஸ்ரீ ரங்கநாதனை
No comments:
Post a Comment