சங்கரி சுதன்
பல்லவி
சங்கரி மைந்தனை சரவணன் தமையனை
மங்கள மூர்த்தியை மனமாரத் துதித்தேன்
அனுபல்லவி
எங்கும் நிறைந்திருக்கும் கேசவன் மருகனை
பங்கய பதத்தானை பவ பயம் களைபவனை
சரணம்
இங்குமங்குமலைபாயும் மனக்குரங்கை யடக்கி
பொங்கும் மூவாசைப் பிணி போக்கும் கரிமுகனை
சங்கடமிடர் நீக்கும் ஆனை முகத்தோனை
மங்காத புகழ் மேவும் மணக்குள விநாயகனை
No comments:
Post a Comment