Tuesday, 9 September 2014

தேவாதி தேவன்



  தேவாதி தேவன் 


பல்லவி

தேவாதி தேவனை  மகாகணபதியை

 நாவாரப் பாடி மனமாரத்துதித்தேன்

அனுபல்லவி

மூவாசை ப்பிணி தீர முன்வினைப்பயன் நீங்க

 அவன் நாமமே ஓதி  அவன் தாள் பணிந்து

 சரணம்

  மாவிடை வாகனன் பரமசிவன் மகனை

  தேவசேனாபதி முருகனின் சோதரனை

   தேவரும் முனிவரும் நந்தியும் கணங்களும்

    யாவரும் வணங்கிடும் கேசவன் மருகனை 
 

No comments:

Post a Comment