கமலக்கண்ணன் ( தனியன்கள் )
கமலக்கண்ணனை கமலனாபனை
கமல சரணங்கள் பணிந்து போற்றினேன்
கமலமலரமர் லக்ஷ்மி தேவியை
கமல மார்பினில் தாங்கும் மாலனை
கமலக் கரங்களில் சங்கும் சக்ரமும்
வனமாலை கதையுமே ஏந்தும் தேவனை
கமலக்கண்ணனை கமலனாபனை
கண்முன் காணவே கழல்கள் போற்றினேன்
மாயை நோய்தனை ஓயச்செய்திடும்
மாயன் கேசவன் நீலவண்ணனை
காற்றும் வெளியுமாய் உலகம் முழுவதும்
ஆக்கியழித்திடும் காக்கும் கடவுளை
கமலக்கண்ணனை கமலனாபனை
கண்முன் காணவே கழல்கள் போற்றினேன்
நரர்சுரர்களும் முனிவரிந்த்ரனும்
புரியும் செயல்களை நடத்தி வைத்திடும்
அரியை முகுந்தனை மறைகள் போற்றிடும்
உலகநாதனை வைகுண்ட வாசனை
கமலக்கண்ணனை கமலனாபனை
கண்முன் காணவே கழல்கள் போற்றினேன்
சரணடைந்தவர் நலனைக்காத்திடும்
மரணம் பிறப்பெனும் மாயை நீக்கிடும்
குறும்புக்காரனை கோபாலக்ருஷ்ணனை
தரணியாண்டிடும் சேதுராமனை
கமலக்கண்ணனை கமலனாபனை
கண்முன் காணவே கழல்கள் போற்றினேன்
No comments:
Post a Comment