ஸ்ரீ காமாக்ஷி
பல்லவி
உன்னையும் என்னையும் ஆட்டிப் படைக்கும்
அன்னை காமாக்ஷியை மனமாரத் துதித்தேன்
அனுபல்லவி
பன்னகாபரணன் ஏகாம்ரேச்வரனின்
உன்னத மனங்கவர் கேசவன் சோதரியை
சரணம்
நன்னெறி காட்டிடும் குருமணி சங்கரரும்
அன்புடன் குமரனும் ஆனை முகத்தோனும்
இன்னும் முனிவரும் வானுறை தேவரும்
என்றும் பணிந்தேத்தும் ஏகாம்ரேச்வரியை
No comments:
Post a Comment