திரிபுர சுந்தரி
பல்லவி
உனையன்றி எனக்கருள வேறு யாருள்ளார்
கனகமலைதனில் வீற்றிருப்பவளே
அனுபல்லவி
மனத்திலுன் பதமலர் தனையே நினைத்து
அனவரதமுமுன் நாமமே துதித்தேன்
சரணம்
வனமாலையணிந்த கேசவன் சோதரி
அனங்கனும் நாணும் அழகுடையவளே
வனவிலங்கெனவே புலன்வழி செல்லுமென்
மனக்குரங்கை அடக்கி பவ பயம் போக்கிட
No comments:
Post a Comment