அத்தி வரதன்
பல்லவி
அத்திகிரி வரதனை உலகேத்தும் கேசவனை
பக்தியுடன் துதித்து பாதம் பணிந்தேன்
அனுபல்லவி
சித்தத்திலிருத்தி சீரடி சென்னிவைத்து
நித்தமுமவன் நாமம் நாவார உரைத்து
சரணம்
கத்தும் கடல் நடுவே பள்ளிகொண்ட திருமாலை
வித்தகர் பணிந்தேத்தும் தேவாதி தேவனை
நித்திலத் தொத்தினை நிமலனை அமலனை
எத்திசையும் புகழ் விளங்கும் காஞ்சியில் காட்சிதரும்
Sri Varadarajar, Kanchipuram, TN.
என்னெஞ்ச மேயான்என் சென்னியான், தானவனை
வன்னெஞ்சங் கீண்ட மணிவண்ணன், - முன்னம்சேய்
ஊழியா னூழி பெயர்த்தான், உலகேத்தும்
ஆழியான் அத்தியூ ரான்.
(Bhoothathazhwa r)
He resides in my heart forever...
His Holy feet are always on my head...
He is the gem-hued Lord who destroyed the Asuras.
He is the first-cause lord of deluge and creations, the discus-wielder. .
He is the resident of Attiyur, Kanchi.
His Holy feet are always on my head...
He is the gem-hued Lord who destroyed the Asuras.
He is the first-cause lord of deluge and creations, the discus-wielder.
He is the resident of Attiyur, Kanchi.
No comments:
Post a Comment