Sunday, 7 September 2014

திருவரங்க நாயகி

திருவரங்க நாயகி 


பல்லவி

தாயும்  சேயுமாயவதரித்து  ஆதரிக்கும்

 மகாலக்ஷ்மியை மனமாரத்துதித்தேன்

 அனுபல்லவி

 தேயாத புகழ் மேவும் திருவரங்கம் தனில்

  மாயன் கேசவன் மனம் மகிழ உடனிருக்கும்

  சரணம் (1)

   ஆயாசம் களையும் பாலளிக்கும் பசுவாக

   நோய் தீர்க்கும் மருந்தாக  பசி போக்கும் பயிராக

   ஆயகலை கற்றார்க்கும் கல்லார்க்கும் உயிராக

   உழவர் கரமாக  நிலமாகப்  புவிகாக்கும்

     சரணம் (2)

    தூய செந்தாமரை மலர்  மீதமர்ந்தவளை

    பாயுமொளி வீசும் செம்பொன் மேனியளை

   நேயமுடனடியாரைக் காத்தருளும் கடல் மகளை

    ஓயாமல் தினம் துதிக்கும்  தூய பக்தருக்கு


 (நன்றி:இந்திர ஸ்ரீநிவாசன் )

No comments:

Post a Comment