சேவற்கொடியோன்
பல்லவி
சேவற்கொடியோனை கேசவன் மருகனை
ஆவலுடன் கண்டு மனமாரத் துதித்தேன்
அனுபல்லவி
தேவியரிருவரும் அருகிருந்து போற்றும்
தேவசேனாபதியை வேலாயுதனை
சரணம் (1)
கூவியழைத்தால் ஓடோடி வருபனை
மாவிடை வாகனன் பரமசிவன் மகனை
மூவாசைப் பிணி போக்கும் முன்வினைப் பயன் நீக்கும்
தேவாதி தேவனை கரிமுகன் சோதரனை
சரணம்(2)
தேவரும் முனிவரும் பிரமனும் நாரதரும்
தேவேந்திரனும் யாவரும் வணங்கிடும்
தேவிபார்வதியின் அன்புத் திருமகனை
மூவுலகும் பணிந்தேத்தும் கார்த்திகேயனை
No comments:
Post a Comment