பாதாரவிந்தம்
பல்லவி
அரவிந்த பதமொன்றே சதமென்று துதித்தேன்
அரங்கநகர்தனில் பள்ளி கொண்டிருக்குமுன்
அனுபல்லவி
சரணடைந்தோர்க்கெல்லாம் பரகதியளித்திடும்
பரம தயாகரனே பரவாசுதேவனே
சரணம்
அரனயன் நரர் சுரர் சுகசனகாதியர்
சுரபதி நாரதர் வீடணனனைவரும்
கரம் பணிந்தேத்தும் கேசவா மாதவா
கருணைக் கடலே திருவரங்க நாதனே
No comments:
Post a Comment