Tuesday, 2 September 2014

அழுந்தூர் தேவாதி ராஜன்



          அழுந்தூர் தேவாதி ராஜன் 


             பல்லவி

        தேரழுந்தூர் ஆமருவியப்பனைக் கேசவனை

         பார்புகழும் மாதவனை மனமாரத்துதித்தேன்

              அனுபல்லவி

         சாரதியாய் பார்த்தனுக்கு துணையாக நின்று

         பாரதப் போர்நடத்தி  கௌரவரை அழித்த

                    சரணம்

          நீராய் நிலமாய் நெருப்பாய் நீள் விசும்பாய்

          காற்றாய் நின்றானை தேவாதி ராஜனை

          பேராயிரமுடைய  நாராயணனை

          தீரா வினைதீர்த்து ஆண்டருள வேண்டுமென 

No comments:

Post a Comment