ஸ்ரீ அனந்த பத்மநாபன்
பல்லவி
உள்ளத்தில் பள்ளி கொண்ட அனந்தபத்மநாபனை
உள்ளன்புடன் பணிந்து மனமாரத் துதித்தேன்
அனுபல்லவி
கள்ளன் கேசவனை கருமுகில் வண்ணனை
துள்ளித்திரியும் ஆவினங்கள் மேய்த்தவனை
சரணம்
எள்ளளவும் நினையாத ஏழையேன் எனையே
மெள்ளத்திருத்தி தடுத்தாட்கொண்டு
வெள்ளமென மழையாகக் கருணை பொழிந்து
அள்ளக்குறையாத அருளோடு எழுந்தருளி
**************
Sri Anantha Padmanabha Swamy, Gandhi Nagar, Adyar, Chennai.
அவனென்னை யாளி அரங்கத்து, அரங்கில்
அவனென்னை எய்தாமல் காப்பான், அவனென்ன
துள்ளத்து நின்றா னிருந்தான் கிடக்குமே,
வெள்ளத் தரவணையின் மேல்.
No comments:
Post a Comment