Monday, 1 September 2014

ஜகன்மாதா / லோகநாயகி



         ஜகன்மாதா /  லோகநாயகி 



  பல்லவி

   தாமரைப் பூவிலாமர்  தாயுனையே போற்றினேன்

    காமதியறுபகை  நீங்கிட வேண்டியே

    அனுபல்லவி

     ஆமருவியப்பன்  கேசவன் மணிமார்பில்

     க்ஷேமமுடன்  வீற்றிருக்கும்  கோமளவல்லியே

      சரணம்

      பாமரர் பண்டிதர் பணிந்திடும் பத்மாவதியே    

      மாமறை புகழ்ந்தேத்தும் மகாலக்ஷ்மியே 

      மூவுலகும் வணங்கிடும்  திருமகளே அலைமகளே 

       மலைமகளும் கலைமகளும்  அனைத்தும் நீயே 
   
   

No comments:

Post a Comment