Tuesday, 2 September 2014

கோவிந்தனே துணை



             

          கோவிந்தனே துணை 


         பல்லவி

      நீயே என்றும் துணை  கோவிந்தா

      ஓயாதுன் நாமம் உரைத்திடும் எந்தனுக்கு

      அனுபல்லவி

      தாயும் தந்தையும் குருவும் சொந்தமும்

       நீயே என்றுந்தன் மலரடி பணிந்தேன்

      சரணம்

      சாயுஜ்ய பதவியும்   சொர்க்கமும் வேண்டேன்

       மாயா உலகில்  எதுவும் வேண்டிலேன்

       தூயவன் நீயிருக்கும் திருவேங்கடம் தன்னில்

       ஓரிடம் தந்தாலது ஒன்றே போதும்

        

No comments:

Post a Comment