Thursday, 4 September 2014

சிங்கார கணபதி



                   சிங்கார கணபதி


                      பல்லவி

        சிந்தை கவர்ந்திடும் சிங்கார கணபதியை

         வந்தனை புரிந்து மனமாரத்துதித்தேன்

                        அனுபல்லவி

         தந்தையும் தாயும் குருவும் அனைத்து

         சொந்தமும் பந்தமும் அவனென துணிந்து

                            சரணம்

          நந்தியும் கணங்களும் தேவரும் முனிவரும்

          கந்தனும் பிரமனும் இந்திரனும் வணங்கிடும்
         
           தந்தி முகத்தோனை கேசவன் மருகனை

           இந்திநிளம்பிறை சூடிய கரிமுகனை

         

         

         



No comments:

Post a Comment