வேங்கட ரமணன்
பல்லவி
சங்கடம் களைந்திடும் வேங்கட ரமணனை
வேங்கடம் தன்னில் கண்டு துதித்தேன்
அனுபல்லவி
எங்கும் நிறைந்திருக்கும் ஏழைப் பங்காளனை
பொங்கும் மூவாசைப் பிணி போக்கும் கேசவனை
சரணம்
மங்கை பத்மாவதியை மணம் முடித்த மாதவனை
திங்களும் ஞாயிறும் சுகசனகாதியரும்
அங்கி குபேரனும் தேவரும் பணிந்தேத்தும்
செங்கண் மாலை ஸ்ரீமன் நாராயணனை
No comments:
Post a Comment