Thursday, 4 September 2014

கணப்புரத்துக் கருமணி (2)

        கணப்புரத்துக் கருமணி (2)



                பல்லவி 
             
     கணப்புரத்துக் கருமணியே கேசவனே ஸ்ரீ ராமா 

      இணையடி  துதித்தேன் எனக்கருள் புரிவாய் 

         அனுபல்லவி 

      வணங்கிடுமடியார்க்கு நலமனைத்துமளிப்பவனே 

      இணை தனக்கில்லாத  நீலமேக பெருமாளே 

             சரணம் 

      குணம் குறைந்த தாடகையை  வில்வளைத்தழித்தவனே 

       மணம் கமழும் தாமரை  மலரமர் பிரமனின் 

       துணையுடன் உலகனைத்தும் படைத்தவனே திசை போற்றும் 

      குணக் குன்றே காண்பவரின் மனம் கவரும்  பேரழகே 

மன்னுபுகழ் - 2
புண்டரிக மலர் அதன் மேல் புவனியெல்லாம் படைத்தவனே!
திண் திறலாள் தாடகை தன் உரம் உருவச் சிலை வளைத்தாய்!
கண்டவர் தம் மனம் வழங்கும் கணபுரத்தென் கருமணியே!
எண் திசையும் ஆளுடையாய்! இராகவனே! தாலேலோ!

Meaning
Oh Raghava, you who created the whole universe on a lotus flower
One who used the bow and killed Thaataka of strong capability
The black gem which resides in Kannapuram, on seeing you, the people surrender their minds
One who is the ruler in all directions, thaalelo

தாமரை மலர் மேல் அமர்ந்து இந்த உலகை எல்லாம் பிரமன் உருவில் படைத்தவனே! மிகுந்த வலிமை கொண்ட தாடகையின் வலிமை எல்லாம் அழியும் படி வில்லை வளைத்தவனே! உன்னைப் பார்த்தவர் எல்லாம் தங்கள் மனத்தை உன்னிடம் வழங்கும் படி பேரழகுடைய, திருக்கண்ணபுரத்தில் வாழும் என் கருமாணிக்கமே! எட்டு திசைகளையும் ஆளும் வல்லமையுடையாய்! இராகவனே! தாலேலோ!

Event covered from the Ramayana
Rama's killing of Thaataka

Now to the link about three things that we have seen in the above paasuram

Rama-Bow-Thirukannapuram

Even to this day, it is a delectable sight to see the Sowriraaja perumal at Thirukannapuram adorning the Saarngam vil (bow). As we have already seen, aazhwar has described the thirukannapuram divya desam as one surrounded by high walls.

Once upon a time, a king decided to raze down this divya desam and sent his army which began to destroy the walls. When this was happening, an arayar swami came rushing to Sowri perumal and started singing azhwaar's paasurams in order to make Bhagavan stop the army's destruction.

When perumal, true to his archa form did not respond, the arayar got angry and said the following words to Bhagavan:

'Hey Bhagavan, the aazhwars have all sung about you and said that you are holding the bow to protect the world. Is that all false? Are you holding a toy bow? Can you not protect your own divya desam?'

Saying this the arayar threw his vaadyam (hand held drum) at the perumal. This drum hit perumal's thirumugaamandalam and created a vadu (mark - impression) just above His eye. With this, Bhagavan decided to abandon his archa samaanyam (vow that the archa form shall not talk or act) and sent a rain of arrows at the army and sent them packing

Even to this day, Bhagavathas who have the good fortune of laying their eyes on Sowri perumal's divya mangala thirumeni can notice the mark made by the drum.

Posted by Giridhar Prasannan
 —  with Senthil Kumar

   

No comments:

Post a Comment