சங்கரி சுதன்
பல்லவி
அரசமரத்தடியே அமர்ந்திருக்கும் கணபதியை
கரமைந்துடையவனை மனமாரத் துதித்தேன்
அனுபல்லவி
புரமெரித்த பரம சிவனின் மைந்தனை
அரவணை துயிலும் கேசவன் மருகனை
சரணம்
கரமலர் தனிலே பாசங்குசமேந்திடும்
அரவிந்த பதத்தானை ஆனை முகத்தானை
வரங்களையளித்திடும் பரம தயாகரனை
சரவணன் தமையனை சங்கரி சுதனை
No comments:
Post a Comment