தற்பரன் மகன்
பல்லவி
சர்வமும் நீயே மகாகணபதியே
கர்வம் களைந்தெனை வாழ வைப்பாயே
அனுபல்லவி
தர்மம் தழைத்திட தரணி யிலுதித்து
பற்பல லீலைகள் புரிந்திடும் கரிமுகனே
சரணம்
கற்பனைக்கெட்டாத அற்புதப் பொருளே
தற்பரன் மகனே கேசவன் மருகா
கர்மவினைப்பயனால் கட்டுண்டு இவ்வுலகில்
நிற்கதியாய் நிற்கும் அடிமை யெனக்கருள்வாய்
No comments:
Post a Comment