கணப்புரத்துக் கருமணி
பல்லவி
கணப்புரத்துக் கருமணியை மனமாரப் பணிந்தேன்
துணையவன் இணையடி நிழலென துதித்து
அனுபல்லவி
கணையாழி தந்து அனுமனை தூதனுப்பி
அணங்கு சீதையின் துன்பம் தீர்த்த
சரணம்
இணை சொல்ல முடியாத செம்பொன்னால் கட்டிய
பகை நெருங்க முடியாத மாமதில்கள் சூழ்ந்த
அரண்மனையில் வீற்றிருக்கும் ராகவனைக் கேசவனை
வணக்கத்துக்குரிய கோசலை பாலனை
Indra Srinivasan
மன்னுபுகழ் - 1
***********
மன்னுபுகழ் கோசலை தன் மணிவயிறு வாய்த்தவனே!
தென்னிலங்கை கோன் முடிகள் சிந்துவித்தாய்! செம்பொன் சேர்
கன்னி நன் மா மதில் புடை சூழ் கணபுரத்தென் கருமணியே!
என்னுடைய இன்னமுதே! இராகவனே! தாலேலோ!
Meaning:
Oh Raghava, born in the gem like womb of Kousalya.
One who defeated the king of lanka in the south.
One who is the black gem which resides in Kannapuram (Thiru kannapuram) surounded by high walls
Oh my Amude (nectar), thaalelo (may you sleep)
நிலைத்த புகழைக் கொண்ட கோசலையின் பெருமை மிக்க வயிற்றில் வாய்த்தவனே! தென்னிலங்கை அரசனின் மகுடங்கள் தரையில் சிந்தும் படி செய்தவனே! செம்பொன்னால் அமைக்கப்பட்டு யாராலும் (எந்தப் பகைவராலும்) தொடப்படாத கன்னிநன்மா மதில் சூழ்ந்த திருக்கண்ணபுரத்தில் வாழும் என் கரிய மாணிக்கமே! என்னுடைய இனிய அமுதமே! இராகவனே! தாலேலோ!
Bhagavan is indeed the karu mani (black gem). Bhagavathas who have had the good fortune of seeing the thirumnajanam of the aathu perumal (Saalagamaam) or any other Saalagraama thirumeni of Perumal, where the pure white milk flows gently over the kariyaa thirumeni of perumal will agree - that he is indeed the karu mani
In this paasuram, aazhwar has covered two siginifcant events in the Ramayana
1. Rama's birth
2. Rama's victory over Ravana
No comments:
Post a Comment