மீண்டும் மீண்டும்……
பல்லவி
மீண்டும் மீண்டும் உனைப்போற்றி நான் பாட
வேண்டும் திருமுருகா அதற்கு வரமருள்வாய்
அனுபல்லவி
பாண்டவர் நேசன் கேசவன் மருகனே
தாண்டவம் புரிந்திடுமீசன் சிவன் மகனே
சரணம்
ஆண்டியாய்க் கோலம் கொண்டு பழனியிலமர்ந்தவனே
வேண்டுவோர் வேண்டும் வரங்களையளிப்பவனே
தீண்டும் பாம்பினை காலடியில் வைத்தவனே
சீண்டிய தாரகனின் கதை முடித்த வேலவனே
No comments:
Post a Comment