ஆடிய பாதனுனை……
பல்லவி
ஆடிய பாதனுனை நாடித்துதித்தேன்
பாடிப்பாடியே நானும் சலித்தேன்
அனுபல்லவி
தேடித்தேடியுன்னடிமுடிகாணாது
வாடி இளைத்தனர் பிரமனும் கேசவனும்
சரணம்
மாடின் மீதேறி பவனி வரும் சிவனே
தோடுடைய செவியனே காடுதனில் திரிவோனே
ஈடிணையில்லாத கோடிலிங்கேச்வரனே
ஓடி வந்தே நீ எனக்கருள் புரிவாய்
No comments:
Post a Comment