உத்தமியே…..
பல்லவி
உத்தமியே பத்மாவதியே
மெத்தனமேனெனைக் காத்தருள
அனுபல்லவி
கத்தும் கடல் நடுவே துயிலுறங்கும்
உத்தமன் கேசவன் பத்தினியே
சரணம்
புத்தம் புதுமலர்த் தாமரை மேல்
நித்தமமர்ந்து காட்சி தரும்
வித்தகர் போற்றும் கடல் மகளே
சித்தமிறங்கியே அருள் புரிவாய்
No comments:
Post a Comment