Tuesday, 27 June 2023

கெடுமிடரெல்லாமந்த…….

கெடும் இடர்ஆயஎல்லாம்*  கேசவா என்ன*  நாளும் 
கொடுவினை செய்யும்*  கூற்றின் தமர்களும் குறுககில்லார்*
விடம்உடை அரவில்பள்ளி*  விரும்பினான் சுரும்பலற்றும்* 
தடம்உடை வயல்*  அனந்தபுரநகர் புகுதும்இன்றே




                                         கெடுமிடரெல்லாமந்த…….


                                                    பல்லவி

                                கெடுமிடரெல்லாமந்த கேசவன் நாமம் நீக்கும்
                                அடுத்து வந்து அவன் தாள் பணிவோரின்
   
                                                  அனுபல்லவி
                    
                                 கொடிய பவ வினை போக்கும்  தடைகள் நீங்கும்
                                 நெடிய மாலவன் தாள் வணங்கு மடியார்க்கெல்லாம்

                                                     சரணம்

                                 விடமுடைய அரவின் மேல் கிடந்துறங்குமவனை
                                 திடமுடன் நம்பித் துதிக்கும் பக்தருக்கெல்லாம்
                                 உடன் வந்து காக்கும் கடவுள் நாராயணனுமவனே
                                 வடபத்ர சாயியென்னும் திருவரங்கனுமவனே

आकाशात् पतितं तोयं यथा गच्छति सागरम् ।
सर्वदेवनमस्कारं केशवं प्रतिगच्छति ॥
எவ்வாறு ஆகாயத்திலிருந்து பெய்யும் மழையானது கடலையே சென்று அடைகிறதோ அதை போல
அனைத்து தெய்வங்களுக்கு செய்யும் நமஸ்காரமும் கேசவனையே சென்று அடைகிறது
“சத்யம் சத்யம் புனஸ் சத்யம் உத்ஸ்ரிஜ்ய புஜம் உச்யதே, வேதா சாஸ்திரம் பரம் நாஸ்தி ந தைவம் கேசவாத் பரம்”.
(இது உண்மை உண்மை என்று கைகளை உயர்த்தி சொல்லுங்கள் –
வேதங்களை காட்டிலும் உயர்ந்த சாஸ்திரம் இல்லை, கேசவனை காட்டிலும் உயர்ந்த தெய்வம் ஒன்று இல்லை).

No comments:

Post a Comment