நாதனே உன்…..
பல்லவி
நாதனே உன் தாள் பணிந்தேன் நல்லகதி பெற வேண்டி
ஆதரவு நீயன்றி இவ்வுலகில் யாருளார் - ஜகந்
அனுபல்லவி
மாதரசி செண்பகவல்லியை மணி மார்பில்
ஆதரவுடனே வைத்திருக்கும் கேசவனே - ஜகந்
சரணம்
வேதங்கள், சாத்திரங்கள்,புராணங்கள் போற்றும்
மாதவனே மணிவண்ணா பாற்கடலில் துயில்வோனே
கீத வாத்திய கலைகளை ரசிப்பவனே
பூதலம் கொண்டாடும் ஶ்ரீமன் நாராயணனே
No comments:
Post a Comment