மாதா காளி……
பல்லவி
மாதா காளி மனம் கனிதருள் தா
நீதான் துணையென நம்பித் துதித்தேன்
அனுபல்லவி
வேதாகமங்கள் போற்றும் கேசவன் சோதரி
சாதாரணரையும் மேதாவியாகச்செய்யும்
சரணம்
ஆதாரம் நீயே அனைத்துயிர்க்கெல்லாம்
பாதகம் செய்த அரக்கரை மாய்த்தவளே
பூதமைந்தும் பொறிகளய்ந்தும் நீயே
பூதலம் போற்றும் ஆதி சக்தியே
No comments:
Post a Comment