யாழ் பழித்த மொழியாளின்..…..
பல்லவி
யாழ் பழித்த மொழியாளின் மலர்ப் பாதம் பணிந்தேன்
ஊழ்வினைப் பயனகல வேண்டுமென வேண்டி
அனுபல்லவி
பேழ் வாயன் நரசிம்மன் கேசவன் சோதரியை
தாழ்வு மனப்பான்மை அணுகாமலெனைக்காக்கும்
சரணம்
வாழ்வில் நான் கல்வியும் வளமனைத்தும் பெறவும்
காழ்ப்புணர்ச்சி தீவினைகள் எனை அண்டாதிருக்கவும்
சூழ்ச்சி அழுக்காறு வன்மம் கொள்ளாதிருக்கவும்
ஏழேழ் பிறவிக்குமெனைக்காக்க வேண்டுமென
No comments:
Post a Comment