பொன்னிற பட்டாடை அணிந்து, கைகளில் முறையே சங்கு, சக்கரம், கதை, தாமரைகளை ஏந்தியவரும், கருணைக் கடலானவரும், ராதையுடன் கூடி அனைவரையும் தன்வசப் படுத்துபவரும், எப்பொழுதும் புன்முறுவலுடன் கூடிய குருவாயூரப்பனை தியானிக்கிறேன்.
பீதாம்பரம் கரவிராஜித சங்க சக்ரம்
கெளமோதகீ சரஸிஜம் கருணாசமுத்ரம்
ராதா சஹாயம் அதிசுந்தர மந்தஹாசம்
வாதாலயேஸம் அனிசம் ஸ்ருதி பாவயாமி
மங்கள மூர்த்தியை…..
பல்லவி
மங்கள மூர்த்தியை குருவாயுரப்பனை
பங்கயநாபனை மனமாரத்துதித்தேன்
அனுபல்லவி
பொங்கரவணை துயிலும் ஶ்ரீமன் நாராயணனை
திங்களைப் பழிக்கும் திருமுகமுடையவனை
சரணம்
சங்கும் சக்கரமும் கதையும் தாமரையும்
தன் கையிலேந்திய கருணைக்கடலானவனை
தங்க நிறப்பட்டாடையணிந்த கேசவனை
பங்கய மலர்க் கரத்தாள் ராதையுடன் காட்சி தரும்
No comments:
Post a Comment