நித்தமுனைப் போற்றி…….
பல்லவி
நித்தமுனைப் போற்றிப் பாடுமென் மீது
சித்தம் இரங்காததேனய்யா ராமய்யா
அனுபல்லவி
அத்தன் சிவன் போற்றும் நாமமுடையவனே
உத்தனே கேசவனே அயோத்தியின் மன்னவனே
சரணம்
வித்தகர் முனிவர்களனைவரும் துதித்திடும்
பத்தரை மாற்றுப் பசும்பொன்னே ஶ்ரீராமா
உத்தமி ஜானகியின் கரம் பிடித்த ராகவனே
புத்தம் புது மலர் தூவிக் கமல பதம் பணிந்து
No comments:
Post a Comment