கோவிந்தனென்று சொல்…..
பல்லவி
கோவிந்தனென்று சொல் கோபலனென்று சொல்
ஆவினங்கள் மேய்க்கும் கேசவனென்று சொல்
அனுபல்லவி
தேவகி மைந்தனென்றும் தேவாதி தேவனென்றும்
காவளம் பாடிக் கண்ணனென்றும் சொல்
சரணம்
மூவாசைப்பிணி போக்கும் முகுந்தனென்று சொல்
கோவர்த்தன கிரியேந்திய கோபலனென்று சொல்
பூவுலகோர் போற்றுகின்ற மலர்நாபனென்று சொல்
நாவேயென் நாவேயந்த நாராயணனை
No comments:
Post a Comment