பலவாறு …….
பல்லவி
பலவாறு உனைப் போற்றிப் பாடித்துதித்தேன்
உலகில் நீயே கண்கண்ட தெய்வமென
அனுபல்லவி
அலகிலா விளையாடல் பல புரிந்த கேசவனே
நிலம் நீர் நெருப்பு காற்று வெளியானவனே
சரணம்
நிலவைப் பழிக்கும் அழகிய முகத்தோனே
குலம் கல்வி செல்வமனைத்தும் தருபவனே
சலசயனப் பெருமாளே அருமாகடலமுதே
நலமனைத்துமருளும் நாராயணனே
No comments:
Post a Comment