குருவாயூர்க் கேசவனை……
பல்லவி
குருவாயூர்க் கேசவனைத் தொழுதேன் நான் தினமே
அருள்வானென வேண்டி அவன் பாதம் பணிந்தேன்
அனுபல்லவி
திருமாலவன் வழி காட்டிட வேண்டுமென விரும்பி
கருநிறக் கண்ணனவன் நாமங்களோதி
சரணம்
குருவம்மா பூந்தானம் பட்டத்திரி போலே
பெருமானவன் கருணைவிழி என் மேல் விழவும்
கருமவினைப் பயன்கள் தொலைந்திட வேண்டியும்
அருமாகடலமுதனவன் நாமங்களோதி
No comments:
Post a Comment