கலைமகளுனையே….
பல்லவி
கலைமகளுனையே பாடிப் பரவசித்தேன்
கலையாத கல்வியுமிசை ஞானமுமெனக்கருள்வாய்
அனுபல்லவி
அலைமகள் நாதன் கேசவனுடனே
மலைமகள் துணைவனும் இணைந்து போற்றும்
சரணம்
விலைமதிப்பில்லாத கல்வியும் ஞானமும்
தொலையாத செல்வமும் பேரின்ப வாழ்வும்
நிலைத்திருக்கும் நிம்மதியும் உன் நினவு
குலையாத நெஞ்சகமும் பெற வேண்டி
No comments:
Post a Comment