செண்பகவல்லி……
பல்லவி
செண்பகவல்லி நின் மலர்ப்பதம் பணிந்தேன்
கண் மலர் திறந்தெனக்கபயமளித்திடுவாய்
துரிதம்
விண்ணவர் மண்ணவர் நரர் சுரரிந்திரன்
பண்புள்ள முனிவர்கள் கரம் பணிந்தேத்தும்
அனுபல்லவி
தண்மதி பிறைசூடும் கேசவன் சோதரி
மண்மகளும் கலைமளும் பணிந்தேத்துமீச்வரி
சரணம்
புண்ணியம் செய்தோர்க்குக் கண்ணெதிரில் காட்சிதரும்
வண்ணமயமானவளே ஶ்ரீலலிதாம்பிகையே
விண்ணும் மண்ணும் அனைத்தும் படைத்தவளே
பண்ணிசைத்துப் பாடியுன்னருள் வேண்டி நின்றேன்
No comments:
Post a Comment