சரவணபவனே…..
பல்லவி
சரவணபவனே மயில் வாகனனே
கரம் குவித்து சிரம் தாழ்த்தி உனைப்பணிந்தேனே
துரிதம்
நரர் சுரர் நான்முகன் நந்தி கணங்கள்
நரபதி அனைவரும் வணங்கித் துதித்திடும்
அனுபல்லவி
அரவிந்த நாபன் கேசவன் மருகனே
பரமசிவன் பார்வதி கொஞ்சிடும் குகனே
சரணம்
கரமீராறுடைய கார்த்திகேயனே
விராலி மலையமர்ந்த வேலாயுதனே
சுரபதி மகளை மணம் புரிந்தவனே
சரணடைந்தோரை காத்தருளும் கந்தனே
No comments:
Post a Comment