நூலாடையணிந்து……..
பல்லவி
நூலாடையணிந்து குளிர் நடுக்கம் தீர்த்த
மாலனை விட்டலனை மனம் குளிரப் பணிந்தேன்
அனுபல்லவி
காலனாய்க் கம்சனைக் காய்ந்த கேசவனை
பாலன் பிரகல்லாதனுக்கு அருள் தந்த ஶ்ரீஹரியை
சரணம்
ஓலமிட்டுக் கதறிய கரிக்கபயம் தந்தவனை
நீலவண்ணனை ஆலிலையில் துயின்றவனை
பாலாழி தனிலுறங்கும் ஶ்ரீமன் நாராயணனை
கோலாகலமாக பண்டரிபுரத்திலுறை
No comments:
Post a Comment