பல்லவி
வரதா வரதா வரம் தா வரதா
பரதேவி திருமளை மார்பில் வைத்திருக்கும்
அனுபல்லவி
அரனயன் பணியும் மாதவனே கேசவனே
பரந்தாமனுந்தன் பதம் பணிந்தேனே
சரணம்
கரன் முரனை வதைத்த முராரி நீயே
பரம புருஷனே பாற்கடல் வாசனே
நரர் சுரர் நாரதர் சுகசனகாதியர்
கரம் பணிந்தேத்தும் நாராயணனே
No comments:
Post a Comment