திருமால் கேசவனின்……
பல்லவி
திருமால் கேசவனின் ஒரு நாமமும் போதும்
பெரும் பாவம் தொலையவும் நன்மைகள் பெருகவும்
அனுபல்லவி
வருமிடர் நீங்கவும் பவ பயம் விலகவும்
திருவருள் சேரவும் கவலைகள் தீரவும்
சரணம்
சிறிதளவு அமுதத்துளி மரணத்தை நீக்கவும்
பெரியதொரு நோயை குணப்படுத்த நமக்கு
சிறியத்தொரு மருந்து உதவுவது போலவும்
பெருமாளின் திருவடி அருளும் நினைவும்
கடவுளை நினை
""""""""'""""""""""""""""""""""""
பெரும் வ்யாதியையும் சிறிய மருந்து குணப்படுத்துவதைப்போல்
சிறிதளவே ஆன அம்ருதத்துளி மரணபயத்தை போக்குவதுபோலே
பகவானின் சின்ன ஸ்துதியோ நினைப்பும் நம்பெரும் பாபத்தையே அழிக்கிறது
यथाल्पमप्यौषधमुन्मदं गदं
यथामृतं स्तोकमपि क्षयाद्भयम्।
ध्रुवं तथैवाणुरपि स्तवः प्रभोः
क्षणादधं दीर्घमपि व्यपोहति।।
स्तुति कुसुमांजलि - ७/१०
No comments:
Post a Comment