முல்லைச் சிரிப்புடனே….
பல்லவி
முல்லைச் சிரிப்புடனே முகமாறு கண்டேன்
அல்லல் களைந்தேன் அகமகிழ்ந்து நின்றேன்
அனுபல்லவி
எல்லையில்லாக் களிப்புடனே அவன் புகழைப்பாடும்
நல்லதோர் பாடல் நான் பாடத்துணித்தேன்
சரணம்
சொல்லும் பொருளும் மொழியும் நானறியேன்
சொல்லைச் சொல்லும் வழியறியேன் விதியறியேன்
கல்வியும் இலக்கியமும் இலக்கணமுமறியேன்
நில்லாமல் வெள்ளமென ஓதவோர் ஒளிகண்டேன்
न जानामि शब्दं न जानामि चार्थं
न जानामि पद्यं न जानामि गद्यम् ।
चिदेका षडास्या हृदि द्योतते मे
मुखान्निःसरन्ते गिरश्चापि चित्रम् ।।2।।
ஸ்ரீசுப்ரமண்ய புஜங்கம்
ந ஜானாமி சப்தம் ந ஜானாமி சார்த்தம்ந
ஜானாமி பத்யம் ந ஜானாமி கத்யம்
சிதேகா ஷடாஸ்யா ஹ்ருதி த்யோததே மே
முகாந்நிஸ்ஸரந்தே கிரஸ்சாபி சித்ரம் (02)
புலமை ஏற்பட
சொல்லு மறியேன்சுதி அறியேன்
சொற்கள் சுமக்கும் பொருளறியேன்
சொல்லைச் சொல்லும்விதி யறியேன்
தோய்ந்து சொல்ல நானறியேன்
எல்லை யிலாதோர் ஞான வொளி
இதயத் தமர்ந்து அறுமுகமாய்
சொல்லை வெள்ள மெனப் பெருக்கும்
தோற்றம் கண்டேன் சுடர்கண்டேன்.
பொருள்: சொல்லும் அறியாத, பொருளும் அறியாத, கவியும் அறியாத இச்சிறியேன் ஆறுமுகத்தை நெஞ்சில் நிறுத்திட, அதிசயத்தின் அதிசயமாக சொற்கள் நில்லாமல் வெள்ளமென பெருகிடக் கண்டேன்.
No comments:
Post a Comment