அது வேண்டும் இது வேண்டும்……
பல்லவி
அது வேண்டும் இது வேண்டும் என உனை நான் கேட்கவில்லை
எது வேண்டும் எதுவேண்டாமென உனக்குத் தெரியாதா
அனுபல்லவி
மதுகைடபரை வென்றழித்த திருமாலே
மதுசூதனனே மாதவனே கேசவனே
சரணம்
சதுர் முகனும் சதுர்மறையும் சுகசனகாதியரும்
மதுர மொழி பேசும் தாயார் பத்மாவதியும்
குதுகலத்துடனே கரம் பணிந்தேத்தும்
பதுமநாபனே திருவேங்கடமுடையானே
No comments:
Post a Comment